கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவுமா?
Old accounts – ஐ Close செய்வதால் உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு உதவுவதற்குப் பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் உங்கள் length of credit history மற்றும் உங்கள் credit utilization ratio உட்பட பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
length of credit history: Old accounts – ஐ Close செய்வது உங்கள் கிரெடிட் வரலாற்றைக் குறைக்கலாம், இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம். கடனளிப்பவர்கள் உங்களின் நீண்ட credit history – ஐ பார்க்க விரும்புகிறார்கள், ஏனெனில் இது உங்கள் கடன் வாங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்தும் நடத்தை பற்றிய கூடுதல் தரவை வழங்குகிறது.
credit utilization ratio: Old accounts – ஐ Close செய்வது உங்கள் credit utilization ratio – வையும் பாதிக்கலாம். நீங்கள் Old accounts – ஐ Close செய்வதால் உங்களின் மொத்தக் கிரெடிட்டைக் குறைக்கிறது, மற்ற கணக்குகளில் உங்களின் இருப்பு இருந்தால் உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை அதிகரிக்கலாம். அதிக கடன் பயன்பாட்டு விகிதம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும்.
குறிப்பிட்ட கிரெடிட் கார்டு மூலம் அதிகச் செலவு செய்யும் வாய்ப்புகள் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளையும் கிரெடிட் ஸ்கோரில் ஏற்படக்கூடிய தாக்கத்தை பற்றியும் நிதி ஆலோசகரிடம் மற்றும் கடன் ஆலோசகருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.