பொதுவாக முதலீடுகளுக்கு அனைவரும் Fixed Deposits -யே விரும்புகின்றனர். நிறுவனத்தின் Fixed Deposits என்பது முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை வைக்க மற்றும் Fixed Interest Rates – ஐ பெற அனுமதிக்கிறது. இந்த வைப்புத்தொகைகள் சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் வரை அனுமதிக்கபடுகிறது.
காலப்போக்கில், Corporate மற்றும் Bank Fixed Deposits மூலம் கணிசமான தொகையை சேர்க்கலாம். Corporate, Bank Fixed Deposits போலவே, அவசர காலங்களில் கடனைப் பெறுவதற்கான அதே வாய்ப்பை வழங்குகின்றன. இருப்பினும், கடனைப் பெறுவதற்கான தகுதியும் கடன் தொகையும் நிறுவனத்திற்கு நிறுவனம் , வங்கிக்கு வங்கி மாறுபடும்.
மக்கள் தங்கள் நிலையான வைப்புத்தொகையில் 70 முதல் 80 சதவிகிதம் வரை கடன் வாங்கலாம், ஆனால் முதலீடு செய்வதற்கு முன் Fixed Deposits பற்றிய தகவலை நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தின் நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் வெவ்வேறு நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களைச் ஒப்பிட்டு பார்ப்பது புத்திசாலித்தனமான ஒன்றாக இருக்கும்.