government loan for women
  1. அதிகளவு கடன் தகுதி: வருமானம் கொண்ட பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணைவருடன் இணைந்து விண்ணப்பிக்கலாம். இது அவர்களின் வீட்டு கடன் தகுதியை அதிகப்படுத்துகிறது.
  2. வரி விலக்கு நன்மைகள்: தம்பதியினர் இருவருக்கும் தனித்தனியாக வீட்டு கடன் அடைப்பதின் மூலம் கிடைக்கப்பெறும் வரி நன்மைகள் இருவரும் சேர்ந்தே அடைப்பதிலும் கிடைக்கின்றன. குறிப்பாக ரூ.1.5 லட்சம் வரை தனித்தனியாக அடைப்பதற்கும் (பிரிவு 80C) சேர்ந்து அடைப்பதில் ரூ.2 லட்சம் வரையிலும் (பிரிவு 24) கிடைக்கிறது. எனவே ஒரு குழுவாக அவர்கள் மொத்தம் ரூ.3 லட்சம் வரையிலும் (பிரிவு 80C) ரூ.4 லட்சம் வரையிலும் (பிரிவு 24) வரி விலக்கு நன்மையை EMI செலுத்துவதன் மூலம் பெறலாம். இது ஒன்றே சேமிப்பின் மிக முக்கிய அங்கமாக விளங்கும்.
  3. குறைந்த முத்திரைதாள் கட்டணம்: ஒரு பெண்மணி என்ற வகையில் சொத்து வாங்குவது முத்திரை தாள் கட்டண விகிதத்தில் மிகப்பெரிய நன்மைகளை பெற்றுத்தருகிறது. மாநில அரசு பெண்கள் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதால் முத்திரை தாள் கட்டணத்தில் 1-2% தள்ளுபடி வழங்குகிறது. பணியாற்றும் பெண்கள் ரூ.30 லட்சம் பெறுமான சொத்துக்கு உரிமையாளர் என்றால் கூடுதலாக ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை நன்மையடையலாம்.
  4. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்): PMAY இன் கீழ் EWS, LIG அல்லது MIG பிரிவுகளின் கீழ் வருபவர்கள் அரசு மானியமாக ரூ.2.67 லட்சம் வரை தங்கள் முதல் வீட்டை வாங்க கடன் பெறும்போது கடன் அசல் தொகையிலிருந்து தள்ளுபடி நன்மையை பெறுகின்றனர். இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால் பெண் சொத்தின் முழு உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ இருத்தல் வேண்டும் என்று PMAY கட்டாயமாக்குகிறது.
    பெண்களுக்கான வீட்டு கடன் பெறும் தகுதி:
    எந்தவொரு நிதி நிறுவனமும் கடன் வழங்க ஒப்புக்கொண்டால் அதற்கு ஈடான அடமானத்தை கோரும். அதை கடனுக்கு விண்ணப்பிப்பவர்பூர்த்தி செய்ய வேண்டும். Loan Planner பொறுத்தவரை பெண்களுக்கான தகுதி நிபந்தனைகள் குறைவாகவும் எளிதாகவும் உள்ளன.
  • அவர் ஒரு இந்திய குடிமகளாக இருக்க வேண்டும்.
  • அவர் வயது 20 மற்றும் 60 க்குள் இருக்க வேண்டும்.
  • அவர் இரண்டு வருடங்களுக்கு வேலையில் இருக்க வேண்டும்.
  • அவருடைய கிரெடிட் ஸ்கோர் 650 அல்லது அதற்கு அதிகம் இருக்கவேண்டும்.
  • மாத சம்பளம் ரூ.15,000 க்கு அதிகமிருக்க வேண்டும்.
    மேற்கூறிய பெண்களுக்கான வீட்டு கடன் நன்மைகள் கடன் பெறுபவருக்கு மிக முக்கிய வழிகளில் கடன் பெறும் ஒப்புதலையும் கடன் அடைப்பதையும் சுலபமாக்கி அதிகளவில் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க உதவுகிறது. வாழ்க்கை துணைவரை ஒரு இணை உரிமையாளராக இணை சேர்ப்பது EMI யின் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல் பெண்களுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் அமைகிறது.
    இவ்வாறாக வீடு வாங்க விரும்பும் பெண்மணிகள் பெண்களுக்கான வீட்டு கடனை பெற்று உங்கள் கனவை நனவாக்கும் ஒரு அடியெடுத்து வையுங்கள்!

கீழே உள்ள எங்களது Facebook Loan Planner Group Link-ஐ கிளிக் செய்து அதில் சேர்ந்து, லோன் பற்றிய அனைத்து தகவல்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். Fb group Link -https://www.facebook.com/groups/loanp… எங்களது இதர Social Media accounts to follow: Facebook page -https://www.facebook.com/loanplanneroffl YouTube Channel -https://www.youtube.com/@Loanplanneroffl

#loans #loandetails #loanservices #LoanSolutions #loanofficer #loans #loanplanner #homeloan #carloan #housingloan #personalloan #ownhome #ownhouse

Get less loan Interest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
Hello 👋 Welcome to Loan tamila