வர்க்கத்தினரின் பல இலட்சியங்களில், இன்றைய உழைக்கும் வர்க்கத்தினரின் பல இலட்சியங்களில், முதலிடம் பெறுவது அவர்களின் சொந்த வீடாக இருக்கும். ஒரு வீட்டு லோன் உங்கள் கனவு இலக்கை நோக்கி அழைத்துச் செல்கிறது- உங்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு, ஒரு புதிய பாதையை தொடங்குவதற்கு, ஒரு பெரிய வீட்டிற்கு மாறுவதற்கு உறுதுணையாக உள்ளது.
வீட்டு லோன் என்றால் என்ன?
வீட்டு லோன் என்பது ஒரு வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கும் கடன் தொகையாகும். இது ஒரு பாதுகாப்பான லோனாகும், மற்றும் லோன் திருப்பிச் செலுத்தப்படும் வரை சொத்து பாதுகாப்பாக கடன் வழங்குநரிடம் அடமானம் வைக்கப்படும். லோன் மற்றும் அதற்கான வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்தும் வரை வங்கி அல்லது நிதி நிறுவனம் சொத்தின் உரிமை அல்லது பத்திரத்தை வைத்திருக்கும்.
கடன் வாங்குபவரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய சந்தையில் பல வகையான வீட்டுக் லோன்கள் உள்ளன:
Home Loan – என்பது ஒரு புதிய வீடு/அபார்ட்மெண்ட் வாங்க அல்லது வீடு கட்டுவதற்கு பொது வகையான வீட்டு லோனாகும்.
Home Improvement Loan – என்பது ஏற்கனவே உள்ள வீட்டை புதுப்பிக்க எடுக்கப்படுகிறது.
Home Extension Loan – என்பது வீட்டை நீட்டிக்க அல்லது விரிவாக்க ஒரு புதிய அறை கட்டுவதற்காக வாங்ககூடிய லோன் – ஐ குறிக்கும்.
Loan against property – என்பது ஏற்கனவே இருக்கும் சொத்தின் மீது கடன் கோருபவர்களுக்கானது.
Land Purchase Loan – என்பது ஒரு முதலீடாக நிலம் வாங்க அல்லது எதிர்காலத்தில் ஒரு வீடு கட்டுவதற்கானது.
Balance Transfer Loan – என்பது ஏற்கனவே இருக்கும் வீட்டு லோனை அடைக்கப் பெறப்படுகிறது, இதனால் கடன் வாங்குபவர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் லோன் வாங்க முடியும்.
வட்டி விகிதங்களின் வகைகள் என்ன?
கடன் வழங்குநர்கள் standard Interest rate அல்லது fluctuate Interest rate என இரண்டு வகைகளில் வழங்கபடுகிறது
standard Interest rate என்பது லோனின் முழு காலத்திற்கும் விதிக்கப்படும் மற்றும் லோன் காலம் முழுவதிற்கும் ஒரு நிலையான EMI செலுத்தப்படும்.
fluctuate Interest rate என்பது லோன் காலத்தின்போது சந்தை நிலைமைகளைப் பொறுத்து உங்கள் வட்டி விகிதம் மாறுபடும் என்பதாகும்.
வீட்டு லோனிற்கு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் மற்ற செலவுகள் என்ன?
வீட்டு லோனில், Registration charges, transfer charges, stamp duty charges வீட்டின் விலையில் சேர்க்கப்படுகின்றன. மற்ற சில கட்டணங்களில் உட்படுவது:
Processing fees or booking fees – நீங்கள் லோனிற்கு விண்ணப்பிக்கும்போது கடன் வழங்குநருக்கு செலுத்தப்படும். அது நிலையாக அல்லது லோன் தொகையின் ஒரு சதவிகிதமாக இருக்கலாம்.
Prepayment penalty – லோன் ஒப்புக் கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பே திருப்பிச் செலுத்தப்பட்டால், சில கடன் வழங்குநர்கள் முன் செலுத்திய தொகையில் 2% வரை அபராதம் வசூலிக்கலாம்.
Miscellaneous expenses – ‘விண்ணப்பக் கட்டணம்’ என்று அழைக்கப்படும் ஆவணமாக்கல் கட்டணமும் இதில் அடங்கும்.